Wednesday, November 15, 2006

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட

முதல் முறையாக, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோக் ராக்கெட் பரிசோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. மின்னஞ்சலில் வந்த செய்தியை ஆய்ந்து பார்க்கும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட COKE + Mentos =Rocket என்ற சோதனை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.
முதலில் விளைவைப் பாருங்கள். பிறகு பேசுவோம் நிறைய.....




4 comments:

Anonymous said...

அந்த பின்னனி இசை மனதை உருக்குதப்பா!

ஆராய்சி அணிக்கு எனது பாராட்டுக்கள்.

-இவன்

யாரோ - ? said...

நானும் மெயில் பார்த்தேன்..
ஆனால் இப்படிப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியான எண்ணம் எனக்கு உதிக்கவில்லை..
நன்றி உங்கள் சிந்தனை புதிதி..
உங்கள் குழுவுக்கும் எனது நன்றிகள்.

புதிய பாமரன் said...

ஏழுமலை தாண்டிவந்தா ஏலேலங்கிளியே
ஏழுகடல் தாண்டிவந்தா ஏலேலங்கிளியே
பெரிய காடு ஒண்ணிருக்கும் ஏலேலங்கிளியே
காட்டுக்குள்ளே ஊரிருக்கும் ஏலேலங்கிளியே
மொத்ததிலே நாலே வீடு ஏலேலங்கிளியே
தண்ணியில்ல கரண்டுமில்ல ஏலேலங்கிளியே
தின்பதற்கும் ஏதுமில்ல ஏலேலங்கிளியே
கொடுமயிலும் கொடுமையாச்சு ஏலேலங்கிளியே

ஆடுமேய்க்க கிளம்பியாச்சு ஏலேலங்கிளியே
ஆறு மணிக்கு திரும்பிடுவான் ஏலேலங்கிளியே
பசியெடுத்த மதியவேளை ஏலேலங்கிளியே
வயிற்றில் போட ஏதுமில்ல ஏலேலங்கிளியே
உச்சிமரக் கிளையிலதான் ஏலேலங்கிளியே
நாவப்பழம் நெறஞ்சிருக்கு ஏலேலங்கிளியே
மரமேறி உலுக்கிவிட்டான் ஏலேலங்கிளியே
கிளையொடிந்து விழுந்துவிட்டான் ஏலேலங்கிளியே

கழுத்து முறிஞ்சு கிடக்கின்றான் ஏலேலங்கிளியே
தண்ணீர் கேட்டு அலறுகிரான் ஏலேலங்கிளியே
குடிக்கத் தண்ணி வேணுமின்னா ஏலேலங்கிளியே
ஊரிலெயும் தண்ணியில்ல ஏலேலங்கிளியே
பத்து மயிலு போய்வரணும் ஏலேலங்கிளியே
பாவி உயிரு தாங்கிடுமா ஏலேலங்கிளியே

கோகா கோலா குப்பியோடு ஏலேலங்கிளியே
குட்டிப் பையன் ஓடிவந்தான் ஏலேலங்கிளியே
ஒண்டிக் குடிசைக் கடையிலே ஏலேலங்கிளியே
இதுமட்டும்தான் இருக்காம் ஏலேலங்கிளியே
"ஆபத்துக்கும் பாவமில்ல ஏலேலங்கிளியே
அவன் வாயில் இத ஊத்து ஏலேலங்கிளியே"
ஆனாலும் அவன் செத்தான் ஏலேலங்கிளியே

போஸ்ட்டுமார்ட்டம் அறிக்கை வந்தது ஏலேலங்கிளியே
செத்ததுக்கு காரணம்தான் ஏலேலங்கிளியே
கழுத்து முறிவு ஏதுமில்லையாம் ஏலேலங்கிளியே
பூச்சிமருந்து குடித்ததாலே ஏலேலங்கிளியே
செத்துப் போனானாம் பாவிப்பய ஏலேலங்கிளியே

- புதிய பாமரன்.

புதிய பாமரன் said...

ஏழுமலை தாண்டிவந்தா ஏலேலங்கிளியே
ஏழுகடல் தாண்டிவந்தா ஏலேலங்கிளியே
பெரிய காடு ஒண்ணிருக்கும் ஏலேலங்கிளியே
காட்டுக்குள்ளே ஊரிருக்கும் ஏலேலங்கிளியே
மொத்ததிலே நாலே வீடு ஏலேலங்கிளியே
தண்ணியில்ல கரண்டுமில்ல ஏலேலங்கிளியே
தின்பதற்கும் ஏதுமில்ல ஏலேலங்கிளியே
கொடுமயிலும் கொடுமையாச்சு ஏலேலங்கிளியே

ஆடுமேய்க்க கிளம்பியாச்சு ஏலேலங்கிளியே
ஆறு மணிக்கு திரும்பிடுவான் ஏலேலங்கிளியே
பசியெடுத்த மதியவேளை ஏலேலங்கிளியே
வயிற்றில் போட ஏதுமில்ல ஏலேலங்கிளியே
உச்சிமரக் கிளையிலதான் ஏலேலங்கிளியே
நாவப்பழம் நெறஞ்சிருக்கு ஏலேலங்கிளியே
மரமேறி உலுக்கிவிட்டான் ஏலேலங்கிளியே
கிளையொடிந்து விழுந்துவிட்டான் ஏலேலங்கிளியே

கழுத்து முறிஞ்சு கிடக்கின்றான் ஏலேலங்கிளியே
தண்ணீர் கேட்டு அலறுகிரான் ஏலேலங்கிளியே
குடிக்கத் தண்ணி வேணுமின்னா ஏலேலங்கிளியே
ஊரிலெயும் தண்ணியில்ல ஏலேலங்கிளியே
பத்து மயிலு போய்வரணும் ஏலேலங்கிளியே
பாவி உயிரு தாங்கிடுமா ஏலேலங்கிளியே

கோகா கோலா குப்பியோடு ஏலேலங்கிளியே
குட்டிப் பையன் ஓடிவந்தான் ஏலேலங்கிளியே
ஒண்டிக் குடிசைக் கடையிலே ஏலேலங்கிளியே
இதுமட்டும்தான் இருக்காம் ஏலேலங்கிளியே
"ஆபத்துக்கும் பாவமில்ல ஏலேலங்கிளியே
அவன் வாயில் இத ஊத்து ஏலேலங்கிளியே"
ஆனாலும் அவன் செத்தான் ஏலேலங்கிளியே

போஸ்ட்டுமார்ட்டம் அறிக்கை வந்தது ஏலேலங்கிளியே
செத்ததுக்கு காரணம்தான் ஏலேலங்கிளியே
கழுத்து முறிவு ஏதுமில்லையாம் ஏலேலங்கிளியே
பூச்சிமருந்து குடித்ததாலே ஏலேலங்கிளியே
செத்துப் போனானாம் பாவிப்பய ஏலேலங்கிளியே

- புதிய பாமரன்.